`வங்கியின் வாராக்கடன் சிக்கலுக்கு காங்கிரஸ் தான் காரணம்' - மோடி குற்றச்சாட்டு!

வங்கிகளில் ஏற்பட்டுள்ள வாராக்கடன் பிரச்னைகளுக்கு முந்தை காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே காரணம், என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மோடி


இந்திய அஞ்சல் துறை சார்பில் நடைபெற்ற தபால் வங்கி சேவையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், `கடந்த 60 ஆண்டுகளில் வங்கிகள் அளித்த கடன் மதிப்பு, ருபாய் 18லட்சம் கோடி. ஆனால், கடந்த 2008 முதல் 2014 வரையிலான காலக்கட்டத்தில் வங்கி கடன் 52லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. பெரும் தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், ஆட்சி அதிகாரத்தின் உதவியுடன் கடன் கேட்டால், எவ்வித சட்டங்களையும், விதிகளையும் பின்பற்றாமல் வங்கிகள் கடனுதவி அளித்துள்ளன.

அந்த பணம் திரும்பி வராது என்று தெரிந்துமே, அவர்கள் அந்த தவறை செய்துள்ளனர். வங்கிகளால் ஏற்பட்டுள்ள வாராக்கடன் பிரச்னைக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் காரணம்.பா.ஜ.க தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, 12 தொழிலதிபர்கள் மூலம் வராக்கடன் 175 கோடி பெறப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்களிடமிருந்து, ஒவ்வொரு பைசாவையும் வசூலிக்காமல் விடமாட்டேன். புதைக்குழியில் இருந்த பொருளாதாரத்தை மீட்டு, அதை வலுப்படுத்தியிருக்கிறோம்' இவ்வாறு அவர் பேசினார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!