`இலவசமாக அரிசி தாருங்கள்' - பிரதமரிடம் கோரிக்கை விடுக்கும் கேரள முதல்வர்

கேரளாவுக்கு ஒதுக்கீடு செய்துள்ள அரிசி விநியோகத்தில் எந்தவொரு கட்டணத்தையும் மத்திய அரசு வசூலிக்கக் கூடாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன் 

கேரளாவில் பெய்த கனமழை காரணமாக லட்சக்கணக்காக மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். உணவு, உடை போன்ற அத்தியாவசிய நிவாரண பொருள்கள் கேரளாவுக்கு வந்த வண்ணம் உள்ளது. இதனிடையில் மத்திய அரசு வினியோகிக்கும் அரிசியை இலவசமாக வழங்க வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடியிடம்,  கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில், `கேரளாவுக்கு ஒதுக்கீடு செய்துள்ள அரிசி விநியோகத்தில் எந்தவொரு கட்டணத்தையும் மத்திய அரசு வசூலிக்கக் கூடாது. வெள்ளத்தால் ஏற்பட்ட நிலைமைகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அரிசி விலையைக் கழிக்க வேண்டாம். மேலும், மத்திய அரசு கூடுதலாக அரிசி வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளார். 

முன்னதாக, மத்திய அரசிடம் 1.18 லட்சம் டன் அரிசியைக் கேரள அரசு இலவசமாகக் கேட்டுள்ளது. அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய உணவு அமைச்சகம் மாநிலத்திற்கு 89,540 டன் அரிசியை ஒதுக்கீடு செய்துள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!