`கொல்கத்தாவில் கண்டெடுக்கப்பட்டது குழந்தைகளின் சடலங்கள் கிடையாது' - மருத்துவர்கள் விளக்கம்! 

கொல்கத்தாவில் ஹரிதேப்பூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது குழந்தைகளின் சடலங்கள் கிடையாது. மருத்துவக் கழிவுகள்தான் என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

தெற்கு கொல்கத்தா நகரின் ஹரிதேப்பூர் பகுதியில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் அண்மையில் வாங்கிய காலி மனைப் பகுதியில் கட்டடம் கட்டுவதற்காக தூய்மைப் பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில், நேற்று அங்கிருந்த புல்வெளிக்குள் ஆங்காங்கே 14 பிளாஸ்டிக் பைகள் சிதறிக் கிடந்தது கண்டறியப்பட்டது. அவற்றைப் பணியாளர்கள் பிரித்துப் பார்த்தபோது துர்நாற்றம் வீசியது. இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்க்கும்போது அந்தப் பைகளுக்குள் 14 பச்சிளம் குழந்தைகளின் உடல்களும், கருக்களும் சிதைந்த நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது.

இதற்கிடையே, பரிசோதனைக்குப் பின் இதுகுறித்து விளக்கம் அளித்த மருத்துவர்கள், ``புல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் கிடையாது. அதில் இருந்தது மருத்துவக் கழிவுகள் மட்டுமே" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!