வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (03/09/2018)

கடைசி தொடர்பு:11:55 (03/09/2018)

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சற்று முன்னேற்றம்!

கடந்த சில நாள்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பு ரூ.71-க்கு சென்றது. இந்த நிலையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 9 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பு 2018-19-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதாவது, முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.2 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது.  இதன் காரணமாக,  டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 0.23 சதவிகிதம் உயர்ந்து, ரூ.70.84  அதிகரித்து காணப்படுகிறது. 

ரூபாய்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக எந்த அளவுக்குச் சரிய வேண்டுமோ அந்த அளவுக்கு சரிந்துவிட்டது. இப்போதைய நிலையில், ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக 72 வரைகூட சரியலாம். இதற்குப்பிறகு அதன் மதிப்பு உயரத் தொடங்கும். வருகிற டிசம்பர் மாதம் முதல் இதன் மதிப்பு கணிசமான அளவில் முன்னேற்றம் காணத் தொடங்கலாம் என கரன்சி துறை நிபுணர்கள் கருதுகிறார்கள்.