தானே கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

தானே:  மகாராஷ்டிர மாநிலம் தானேயில், அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ள நிலையில், 36 மணி நேரத்திற்கு பின்னர் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

தானே - மும்ப்ரா இடையே உள்ள  ஷில் பாட்டா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் நான்கு தளங்களில் மக்கள் குடியிருந்து வந்தனர்.மேலும் 3 மாடிகள் கட்டும் பணி அதில் நடைபெற்று வந்த நிலையில், தரமற்ற பொருட்களை வைத்து கட்டியதால், புதிய தளங்களோடு ஏற்கனவே கட்டப்பட்ட 4 மாடி கட்டிடங்களும் சேர்ந்து இடிந்துவிழுந்தன.

இதில் 9 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 45 பேர் பலியானதாகவும், 65க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் நேற்று தெரிவிக்கப்பட்ட நிலையில்,
12 தீயணைப்புக்குழுவினரும், 24க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காயமடைந்தவர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்த நிலையில் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 36 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பெண் ஒருவரை மீட்பு படையினர் மீட்டனர்.  அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் மீட்பு பணிகள் இன்றுடன் நிறுத்தப்பட்டுவிட்டதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!