`இதற்கு மேல் என்னால் உதவிட முடியவில்லை'- ரூ.94 சில்லறைக் காசை கேரளாவுக்கு நிவாரண நிதியாக அளித்த முதியவர்! | This elder person Donated Rs 94 To kerala

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (03/09/2018)

கடைசி தொடர்பு:13:15 (03/09/2018)

`இதற்கு மேல் என்னால் உதவிட முடியவில்லை'- ரூ.94 சில்லறைக் காசை கேரளாவுக்கு நிவாரண நிதியாக அளித்த முதியவர்!

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தை புனரமைக்கும் பணியில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த குட்டி மாநிலத்துக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். மதம், இனம், மொழிகளைக் கடந்து கேரளாவுக்கு  உதவி கிடைத்து வருகிறது. கோட்டயத்தைச் சேர்ந்த மோகனன் என்பவர்  கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியது வெறும் 94 ரூபாய் மட்டுமே. ஆனால், இந்த மோகனன்தான் தற்போது இணையத்தில் ஹீரோ. இந்த மோகனன் யார் தெரியுமா... தெருவில் பிச்சையெடுத்து சாப்பிட்டு வருபவர். 

கேரளாவில் முதல்வர் நிவாரண நிதி அளித்த முதியவர்.

கோட்டயம் மாவட்டத்தில் பூன்ஜார் பகுதியைச் சேர்ந்த மோகனன் தன் சேமிப்பை எரட்டுபேட்டா கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ரஷீத்தைச்  சந்தித்து வழங்கினார். இதற்காக 4 கிலோ மீட்டர் தொலைவு நடந்து வந்து ரஷீத்தின் வீட்டுக் கதவை தட்டினார். வெளியே வந்த ரஷீத் வாசல்படியில் முதியவர் ஒருவர் நாணயங்களை எண்ணி அடுக்கி வைத்திருந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்தார். என்ன ஏதுவென்று கேட்டபோது, முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்க வந்ததாக மோகனன் அவரிடத்தில் கூறியுள்ளார். வியப்படைந்த ரஷீத், மோகனன் அளித்த பணத்தை எண்ணி எஸ்.பி.ஐ. வங்கி வழியாக கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பினார்.  நடந்து வந்த மோகனனை பேருந்தில் திரும்பிப் போகுமாறு ரஷீத் 20 ரூபாய் அளித்தார். அதையும் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார் மோகனன். 

கேரளாவில் முதல்வர் நிவாரண நிதி அளித்த முதியவர்.

'என் கையைப் பிடித்துக்கொண்டு சில்லறை நாணயங்களை எண்ணித் தந்தார். என்னால் இதற்கு மேல் உதவிட முடியவில்லை என்று சொன்னபோது இந்த மனிதருக்குள் எத்தனை கருணை மிகுந்த இதயம் உள்ளது' என்றே நான் கருதினேன்' என்று ரஷித் ஃபேஸ்புக்கில் மோகனன் பற்றி பதிவிட்டிருந்தார்.  தொடர்ந்து ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து மோகனனுக்கு வாழ்த்து குவிந்தது. தனக்கு குவிந்த வாழ்த்து பற்றியும்  மோகனன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

கேரள முதலமைச்சர் நிவாரண நிதி 1000 கோடிக்கு மேல் சேர்ந்துள்ளது. அதில் மோகனன் அளித்த 94 ரூபாயும் அடங்கும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close