வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (04/09/2018)

கடைசி தொடர்பு:00:30 (04/09/2018)

வாஜ்பாயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிரதமர் மோடி..!

டெல்லியிலுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இல்லத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, அவரின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார். 

மோடி

உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், கடந்த 16-ம் தேதி காலமானார். முழு அரசு மரியாதையுடன்  நடைபெற்ற இறுதி ஊர்வலத்துக்குப் பின்னர், ராஷ்ட்ரிய  ஸ்மிரிதி ஸ்தல் திடலில் வாஜ்பாயின் உடலுக்கு வளர்ப்பு மகள் இறுதிமரியாதை செய்ய, அதன் பின்னர் தகனம் செய்யப்பட்டது

வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைக்கும் பணிகளில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், டெல்லியிலுள்ள வாஜ்பாய் வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, அவரின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார். அதை, மோடி தன் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.