`எம்.எல்.ஏ. சசி நடவடிக்கை சரியில்லை' - பிருந்தா காரத்துக்கு கடிதம் எழுதிய பெண் தலைவி

பாலக்காடு மாவட்டத்தின் ஷொர்ண்ணூர் தொகுதி எம்.எல்.ஏ. சசி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டி.ஒய்.எஃப்.ஐ. பெண் தலைவி சி.பி.எம் தலைமைக்கு அளித்த புகாரால் கேரள மாநிலத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

எம்.எல்.ஏ. சசி

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் ஷொர்ண்ணூர் தொகுதியில் சி.பி.எம் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சசி. இவருக்கு எதிராக டி.ஒய்.எஃப்.ஐ பெண் தலைவி ஒருவர் சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத்துக்குப் புகார் அனுப்பினார். அதில், எம்.எல்.ஏ. சசி தனக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சி.பி.எம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கும் இ-மெயிலில் புகார் அனுப்பியுள்ளார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி தலைமை மாநில தலைமைக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன்பேரில் எல்.எல்.ஏ-வின் பாலியல் தொல்லை குறித்து விசாரணை நடத்த இரண்டு பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்படும் எனவும் அந்த குழுவில் ஒரு பெண் நிர்வாகியும் இடம்பெறுவார் எனவும் சி.பி.எம் சார்பில் கூறப்படுகிறது. மேலும், இன்று நடக்க இருக்கும் பாலக்காடு மாவட்ட கமிட்டிக் கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் சி.பி.எம் தரப்பில் கூறப்படுகிறது. சி.பி.எம்., எம்.எல்.ஏ அக்கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ பெண் தலைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!