`எங்க புள்ள மாதிரி வளர்த்தோம்...’ - நாயின் காதுகளைக் கடித்துக்குதறிய  ‘குடி’மகனுக்கு விழுந்த தர்ம அடி! | Drunken man bites stray dog ear

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (04/09/2018)

கடைசி தொடர்பு:18:18 (04/09/2018)

`எங்க புள்ள மாதிரி வளர்த்தோம்...’ - நாயின் காதுகளைக் கடித்துக்குதறிய  ‘குடி’மகனுக்கு விழுந்த தர்ம அடி!

மது போதையில் இருப்பவர்கள், ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் செய்திகளை அன்றாடம் கடந்துசெல்கிறோம். ஆனால், மேற்கு வங்கத்தில் ஒருவர், தெருவில் சுற்றித்திரிந்த நாயின் காதைக் கடித்துக் காயப்படுத்தியுள்ளார்.

நாய்
File Photo

 மேற்கு வங்கத்தில், ஹூக்ளி மாவட்டம் உத்தர்பாரா பகுதியைச் சேர்ந்தவர் சம்புநாத். 35 வயதான அவர், கட்டடத் தொழிலாளி. ஒருநாள் முழுவதும் வேலைசெய்து சம்பாதித்த பணத்தை மாலை ஆனதும் மதுக்கடையில் செலவுசெய்துவிடுவார். போதை தலைக்கு ஏறும்வரை குடித்துவிட்டு, உத்தர்பாரா பகுதியில் சாலைகளில் படுத்துறங்கிவிடுவார். நள்ளிரவில் சற்று போதை தெளிந்ததும், கூச்சல் எழுப்பியவாறே தன் வீட்டுக்குச் சென்றுவிடுவார். நள்ளிரவில், தனக்குத் தானே பேசிக்கொண்டு செல்லும் சம்புநாத்தை அப்பகுதியில் இருக்கும் தெரு நாய்கள் துரத்துவது வாடிக்கையான ஒன்று. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, போதையில் உளறிக்கொண்டே நடந்துசென்ற சம்புநாத்தைப் பார்த்து நாய்கள் குரைத்தன. ஆத்திரம் அடைந்த சம்புநாத், நாயின் கழுத்தைப் பிடித்துக்கொண்டு, அதன் காதுகளைப் பலமாகக் கடித்துவிட்டார். ரத்தம் கசிந்த காதுகளுடன் நாய் சாலையில் புரண்டு புரண்டு வலியில் துடித்தது. நாயின் கதறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், பதறிப்போய் வீடுகளைவிட்டு வெளியே வந்து பார்த்தனர். நாயின் காதைப் பார்த்து ஆத்திரமடைந்த அவர்கள், ‘நாய்களை நாங்கள் பிள்ளைகள் போல் வளர்த்து வருகிறோம். நீ தினமும் இரவு குடித்துவிட்டு இம்சை செய்வது மட்டுமல்லாமல், இப்போது எங்கள் நாயின் காதைக் கடித்துவிட்டாயா’ என்று தர்ம அடி கொடுத்தனர். போதை தெளியாமல் தொடர்ந்து உளறிக்கொண்டே இருந்த சம்புநாத்தை போலீஸில் ஒப்படைத்தனர். பொலீஸார் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க