வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (05/09/2018)

கடைசி தொடர்பு:11:38 (05/09/2018)

சரிவுடன் தொடங்கியது பங்குச் சந்தை!

நாட்டின் பங்கு வர்த்தகம் இன்று காலை இறக்கத்தில் காணப்பட்டது. சர்வதேச நிலவரங்கள், அமெரிக்க டாலருக்கு  நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு போன்ற காரணங்களால், இந்திய பங்குச்சந்தைகள் இறக்கத்துடனே தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை  குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 19.23 புள்ளிகள் குறைந்து 38,238.69 புள்ளிகளில் இறக்கத்துடன் தொடங்கியது.

தேசிய பங்குச்சந்தை  குறியீட்டு எண் நிஃப்டி 1.70 புள்ளிகள் முன்னேற்றம் கண்டு 11,522 புள்ளிகளுடன் ஏற்றத்தில் தொடங்கியது. இன்றைய பங்கு வர்த்தகத்தில் சன் பார்மா, விப்ரோ, யூ.பி.எல் ஆகிய நிறுவனப்பங்குகளின் விலை உயர்ந்தும், கோல் இந்தியா, இந்தியா புல்ஸ் எச்.எஸ்.சி, ஜி என்டர்டெயின் மென்ட் ஆகிய நிறுவனப்பங்குகளின் விலை சரிவடைந்தும் காணப்பட்டது. காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 38.12 புள்ளிகள் குறைந்து 38119.80 புள்ளிகளுடன், நிஃப்டி 22.60  குறைந்து 11497.70 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது.

பங்கு சந்தை

 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 18 பைசா உயர்ந்து ரூ.71.40 ஆக அதிகரித்துள்ளது.  நேற்று மாலை வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.71.58 ஆக குறைந்து காணப்பட்டது.