''காதலில் பிரச்னையா... பெண்ணைக் கடத்துவோம்!'' - பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு! | mumbai BJP MLA lands in trouble for allegedly promising to kidnap girls

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (05/09/2018)

கடைசி தொடர்பு:19:00 (05/09/2018)

''காதலில் பிரச்னையா... பெண்ணைக் கடத்துவோம்!'' - பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு!

``இளைஞர்கள் காதலிக்கும் பெண்களைக்  கடத்திவந்துகூட  திருமணம் செய்துவைப்பேன்'' என்று நிகழ்ச்சி ஒன்றில்  பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ -வுக்கு கண்டனங்கள் குவிகிறது. 

பாஜக எம்எல்ஏ ராம் கதம்bj

மும்பை காட்கோபர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ., ராம் கதம் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர். இளைஞர்களைக் கவரும் உத்வேகத்தில் எம்.எல்.ஏ பேசுகையில், ''இப்போது நீங்கள் ஒரு பெண்ணை விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்தப் பெண்ணை திருமணம்செய்ய சம்மதம் கேட்டு அவர் மறுத்தால், என்னிடம் உங்கள் பெற்றோரை அழைத்துக்கொண்டு வாருங்கள். உங்கள் பெற்றோருக்கும் அந்தப் பெண்ணை பிடித்திருந்தால், வேறு என்ன செய்வது. நானே உங்களுக்காக அந்தப் பெண்ணை கடத்திவந்து திருமணம் செய்துவைக்கிறேன்'' என்றார். மேலும். `அப்படி யாருக்காவது காதலில் பிரச்னை என்றால் என்னை அணுகவும்' என்று தன் மொபைல் போன் எண்ணையும் மேடையில் கூறினார். 

எம்.எல்.ஏ-வின் இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. 'பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு பெண்களைக் கடத்துவேன் என்று பேசுவதா' என்று பல முனைகளில் இருந்தும் கண்டனம் குவிகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஜிஜேந்திரா அவ்ஹாத் , ''ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரே 'பெண்களைக் கடத்துவோம்' என்று பொது இடத்தில் பேசுகிறார். இப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் இருக்கும்போது பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள் '' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  எம்.எல்.ஏ., ராம் கதம்  பேசிய வீடியோவையும் ட்விட்டரில் ஜிதேந்திரா  வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் எம்.எல்.ஏ -வின் முதிர்ச்சியற்ற பேச்சுக்கு கடும் கண்டனம்  எழுந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க