''இப்போதுதான் இந்தியக் குடிமகளாக உணர்கிறேன்!''- முதல் திருநங்கை நீதிபதி மகிழ்ச்சி | Now only i feels indian citizen says India's first transgender judge

வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (06/09/2018)

கடைசி தொடர்பு:17:31 (06/09/2018)

''இப்போதுதான் இந்தியக் குடிமகளாக உணர்கிறேன்!''- முதல் திருநங்கை நீதிபதி மகிழ்ச்சி

ந்தியாவில், தன்பாலின உறவுக்குத் தண்டனை அளிக்கும் சட்டப்பிரிவு 377- ஐ உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. திருநங்கைகள் உள்ளிட்ட LGBTQ சமுதாயத்துக்குக்கு விடிவு காலம் பிறந்துள்ளது.

இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி

மேற்கு வங்கத்தில், வடக்கு தினஜ்பூர் மாவட்ட  லோக் அதாலத் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஜோயிதா மாண்டல் இந்தத் தீர்ப்பு குறித்து கூறுகையில், ''இந்தியா நீண்ட காலத்துக்கு முன்னரே சுதந்திரமடைந்துவிட்டாலும், எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. எனக்கு ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டுமென்று ஆசை. இந்தியாவின் சக குடிமக்களுக்கு உள்ளது போல எங்களுக்கு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். வேலை வாய்ப்பு, இடஒதுக்கீடு போன்றவற்றிலும் எங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எங்களைக் களங்கப்படுத்தியது போதும்; எங்களை வைத்து காமெடி செய்ததும்போதும். மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. சமுதாயம் எங்களை மதித்து நடத்தவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது.  எங்களைப் பற்றிய பார்வையை சமுதாயம் மாற்றிக்கொள்ள வேண்டும். தற்போதுதான் நான் ஒரு இந்தியக் குடிமகளாக உணர்கிறேன் ''  என்று தெரிவித்துள்ளார். 

 29 வயதான ஜோயிதா மாண்டல் திருநங்கையாக மாறியதால், வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர். ரோட்டில் பிச்சையெடுத்து சாப்பிட்டவர். பின்னர், தான் சார்ந்த சமுதாயத்துக்கு உழைக்க வேண்டுமென்பதற்காக சட்டப்படிப்பு படித்து, தற்போது நீதிபதியாக உயர்ந்துள்ளார். 2014-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் திருநங்கைகளை இந்தியாவின் மூன்றாம் பாலினமாக அறிவித்தது. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close