கொல்கத்தா நம்பர் ஒன்; 15-வது இடத்தில் தமிழ்நாடு - ஓப்பன் சிக்னலின் 4ஜி ரிப்போர்ட்!

கொல்கத்தா நம்பர் ஒன்; 15-வது இடத்தில் தமிழ்நாடு - ஓப்பன் சிக்னலின் 4ஜி ரிப்போர்ட்!

லண்டனைச் சேர்ந்த தொலைத்தொடர்பு கண்காணிப்பு நிறுவனமான ஓப்பன் சிக்னல் நிறுவனம், இந்தியாவில் இருக்கும் 22 தொலைத்தொடர்பு வட்டங்களிலும் எவ்வாறு 4ஜி சிக்னல் கிடைக்கிறது என்பதை மே 2018ல் தொடங்கி, மூன்று மாதங்கள் கண்காணித்த ஆய்வறிக்கையை இந்த மாதம் வெளியிட்டது. இந்தக் காலத்தில், 90 சதவிகித அவைலபிலிட்டியுடன் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது. இதுமட்டுமில்லாமல், பஞ்சாப் 89.8 சதவிகிதமும், பீகார் 89.2 சதவிகிதமும் எனப் பின்தொடரும் மற்ற 21 தொலைத்தொடர்பு வட்டங்களும் 80 சதவிகிதத்தை எளிதாகக் கடக்கின்றன.

4ஜி report

இந்தப் புள்ளிவிவரங்கள்மூலம் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் முன்னணியில் இருக்கும் அதிகமான தொலைத்தொடர்பு வட்டங்கள் அமைந்துள்ளதைக் காணலாம். கொல்கத்தாவைத் தவிர பிற முக்கிய நகரங்களின் தொலைத்தொடர்பு வட்டங்கள் பின்தங்கியே இருக்கின்றன. 12-வது இடத்தில் டெல்லியும், 13-வது இடத்தில் மும்பையும் இருக்கின்றன. நமது வட்டமான தமிழ்நாடு வட்டமும் 15-வது இடத்தில் பின்தங்கித்தான் உள்ளது. இது, சென்னையையும் உள்ளடக்கிய வட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில், 2012-ல்தான் 4ஜி அறிமுகமானது என்றாலும், தற்போது எல்லாத் தொடர்பு வட்டங்களிலும் இந்த அளவு அவைலபிலிட்டி இருக்கிறது என்பது 4ஜி தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியையே எடுத்துக்காட்டுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!