கைத்தடியுடன் கைலாஷ் யாத்திரையில் ராகுல்!

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார். யாத்திரையில் தான் செல்லும் இடங்கள் குறித்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார். 

யாத்திரை

திபெத்தில் அமைந்திருக்கும் கைலாஷ் மானசரோவர் பகுதிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். `கைலாஷ் செல்லும் வாய்ப்பால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இந்த அழகான பயணத்தில் நான் செல்லும் இடங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்' என கடந்த செப்டம்பர் 4-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதே நாளில் மானசரோவர் பகுதியில் அமைந்திருக்கும் ஏரி மற்றும் இமயமலையின் அழகான இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு  ``மானசரோவர் ஏரி அமைதியாக உள்ளது. அது எல்லாம் கொடுக்கிறது எதையும் இழக்கவில்லை. யார் வேண்டுமானாலும் இதில் நீர் அருந்தலாம். வெறுப்பவர்கள் யாரும் இங்கு கிடையாது. இப்போது புரிகிறதா இந்தியாவில் நீரை ஏன் வணங்குகிறார்கள் என்று? ''

இந்த நிலையில், யாத்திரை மேற்கொண்டுள்ள சக யாத்ரீகர்கள் ராகுல்காந்தியுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்தப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!