`உலகை வென்று வா சாரா..!’ - மகளை வாழ்த்திய சச்சின்

சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.


சாரா

சாராவுக்கு சமூக ஊடகங்களில் ஃபேன்ஸ் அதிகம். அவரின் ஒவ்வொரு புகைப்படமும் லைக்ஸ் அள்ளும். அண்மையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த விழாவில் சாரா பங்கேற்றார். அவ்விழாவில் சாராதான் ஹைலைட். அங்கு எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. உடனே நெட்டிசன்கள் சிலர் சாரா பாலிவுட்டில் கால்பதிக்க உள்ளதாக கிசுகிசுக்கth தொடங்கிவிட்டனர். ஆடைகளுக்கும் ஃபேஷனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சாரா படிப்பிலும் சுட்டி. 

சாரா
 

மும்பையில் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படித்த சாரா, தன் அம்மாவை போன்று லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். தற்போது வெற்றிகரமாகப் படிப்பை முடித்து பட்டமும் வாங்கிவிட்டார். மகளின் இந்தப் பெருமித தருணத்தைக் காண சச்சின் மற்றும் அஞ்சலி லண்டனுக்குப் பறந்தனர்

சாரா பட்டமளிப்பு விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். `நான் என்ன செஞ்சிருக்கேன் தெரியுமா’ என்று பதிவிட்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 20 வயதான சாரா பட்டமளிப்பு கறுப்பு அங்கி, தொப்பியில் க்யூட்டாக இருந்தார். சுட்டி பெண் சாராவின் புகைப்படங்களுக்கு வழக்கம்போல் லைக்ஸ் குவிந்தன... வாழ்த்துகள் சாரா!

சாரா பட்டம் பெற்றது குறித்து ட்விட்டரில் பகிர்ந்த சச்சின், `நேற்றுதான் லண்டன் பல்கலைக்கழகத்தில் சேர வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது போல் இருக்கிறது. அதற்குள் நாள்கள் ஓடிவிட்டன. நீ பட்டமும் வாங்கிவிட்டாய். என்னையும் உன் அம்மாவையும் பெருமைப்படுத்திவிட்டாய். சுதந்திரமாகப் போ... உலகை வென்று வா சாரா...’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!