சந்தையில் மீண்டும் உற்சாகம்! 07-09-2018

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 147.01 புள்ளிகள். அதாவது 0.38 சதவிகிதம் உயர்ந்து 38,389.82 என முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 52.20 புள்ளிகள். அதாவது 0.45 சதவிகிதம் முன்னேறி 11,589.10-ல் முடிந்தது.

டெலிகாம், ஆட்டோமொபைல் மற்றும் உலோகத் துறை பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன. எண்ணெய், ரியல் எஸ்டேட், எஃப்.எம்.சி.ஜி, மருத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் சிலவும் லாபத்துடன் முடிந்தன. வங்கி, பவர் மற்றும் கேப்பிட்டல் கூட்ஸ் துறை பங்குகள் சற்று களையிழந்து காணப்பட்டன.

ஆசிய சந்தைகள் பெரும்பாலும் அமெரிக்க ஜாப்ஸ் அறிக்கை வெளிவர இருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் சற்று தயக்கத்துடனேயே செயல்பட்டதால், இன்று பலவீனமான நிலையிலேயே முடிந்தன. 

ஐரோப்பிய சந்தைகளிலும் ஏராளமான பொருளாதார அறிக்கைகளைப் பின்பற்றியும், அமெரிக்க ஜாப்ஸ் அறிக்கையை எதிர்பார்த்தும் முதலீட்டாளர்கள் செயல்படும் நிலையில், பங்குகள் சற்று மந்த கதியிலேயே தற்போது வர்த்தகம் ஆகிக்கொண்டிருக்கின்றன.

இந்திய சந்தையைப் பொறுத்தவரை இரண்டாவது நாளாக ஷார்ட் கவரிங் காரணமாகவும், சில நல்ல பங்குகளின் விலைகள் சற்று அட்ராக்ட்டிவான நிலையில் இருப்பதால், முதலீட்டாளர்கள் வாங்கியதானாலும் சந்தை முன்னேற்றம் கண்டது.

மேலும், அமெரிக்க டாலருக்கெதிராக இந்திய ரூபாய் சற்று முன்னேற்றம் கண்டதும், சந்தையின் உயர்வுக்கு உதவியது.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

ஹீரோ மோட்டோ கார்ப்  5.5%

பஜாஜ் ஆட்டோ  5.15%

மஹிந்திரா & மஹிந்திரா  4.2%

டாடா மோட்டார்ஸ் 2.7%

லூப்பின் 4.7%

பார்தி ஏர்டெல்  4.6%

ஹிண்டால்கோ 3.5%

கெயில் இந்தியா 3.1%

டாடா ஸ்டீல் 2.7%

அல்ட்ராடெக் சிமென்ட் 3%

டாக்டர் ரெட்டி'ஸ் 2.3%

பஜாஜ் ஃபைனான்ஸ் 2.3%

இன்று, மும்பை பங்குச் சந்தையில் 1553 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1168 பங்குகள் விலை சரிந்தும், 190 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!