மனைவியுடன் தகராறு - விஷம் அருந்தித் தற்கொலைக்கு முயன்ற ஐ.பி.எஸ் அதிகாரி!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் உத்தரப்பிரதேச காவல்துறையில் பணியாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். கான்பூரில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சுரேந்திர குமார் தாஸ் ஐபிஎஸ் அதிகாரி

கான்பூர் நகர எஸ்.பி-யாக உள்ள சுரேந்திர குமார் தாஸ் என்பவர் கடந்த 5-ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாகத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது வரையிலும் அவர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றும் அடுத்த 36 மணி நேரத்துக்கு பிறகே எதையும் கூற முடியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

முன்னதாக, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்ணை காரணமாக சுரேந்திர குமார் தற்கொலைக்கு முயன்றார் என முதற்கட்ட தகவல் வெளியாகியது. அதன் பின்னர், நடைபெற்ற விசாரணை பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து எஸ்.பி சஞ்சீவ் சுமன் கூறுகையில், `மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சுரேந்திர குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலைக்கு முயற்சிக்கு முன் சுரேந்திரர் தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்திருக்கிறார். கடிதத்தை ஆராய்வதற்காகக் கையெழுத்து பரிசோதனை நிபுணர்களிடம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே சுரேந்திர குமார் இந்த முடிவை எடுத்திருக்கிறார். கடந்த ஒரு வாரமாகவே அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அதோடு, `தற்கொலை செய்துகொள்வது எப்படி' என்பதைக் கூகுளில் தேடியுள்ளார். எலி மருந்தையும் சந்தையில் வாங்கி இருக்கிறார். சுரேந்திரரின் மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்' என்றார். கிருஷ்ண ஜயந்தி அன்று தாஸின் மனைவி அசைவ உணவை ஆர்டர் செய்ததாகவும், அதனால் தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இருதரப்பைச் சேர்ந்த பெற்றோர்களும் அவர்களைச் சமாதானப்படுத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!