26 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட இடுக்கி அணையின் மதகுகள், 29 நாள்களுக்குப் பின் மூடப்பட்டன!

தொடர் மழை காரணமாகத் திறக்கப்பட்ட இடுக்கி அணையின் மதகுகள், 29 நாள்களுக்குப் பிறகு இன்று மூடப்பட்டன.

இடுக்கி அணை

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கனமழையைச் சந்தித்தது கேரள மாநிலம். இதனால், மொத்த கேரளமே தண்ணீரில் மூழ்கிப்போனது. மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் திறந்துவிடப்பட்டன. அதில், பிரம்மாண்ட இடுக்கி அணையும் ஒன்று. ஏற்கெனவே பேய் மழையில் மூழ்கிப்போன கேரளாவின் மத்தியப் பகுதி, இடுக்கி அணை திறக்கப்பட்டதால் மிக மோசமான விளைவைச் சந்தித்தது. மீட்புப் பணிகளின் தீவிரம், தமிழக மக்களின் உதவி எனக் கேரளம் தன்னை மெதுவாகச் சரிசெய்துகொண்டுவருகிறது. மழை நின்றுவிட்டதால், இடுக்கி அணைக்கு வரும் தண்ணீர்ன் அளவு குறையத்துவங்கியது.

இடுக்கி அணை

இதனால், 26 ஆண்டுகளுக்குப் பிறகு திறந்துவைக்கப்பட்டிருந்த இடுக்கியில் உள்ள செருதோணி அணையின் மதகுகள், இன்று மதியம் 1 மணிக்கு மூடப்பட்டது. 2,403 அடி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையின் தற்போதைய நீர் மட்டம் 2390.98 அடியாக உள்ளது. பலமாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை வைத்து அரசியல் செய்துகொண்டிருந்த கேரள அரசியல்வாதிகள், ஊடகங்களின் உண்மை முகத்தை இந்த மழை வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறது. இடுக்கி அணையின் ஆபத்தை கேரள மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது. இந்நிலையில், இடுக்கி அணையின் மதகுகள் மூடப்பட்டது கேரள மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!