”விண்வெளிக்குப் போகிறவர்களுக்கு இந்த உடைதான்!” - இஸ்ரோவின் 10,000 கோடி புராஜெக்ட்

இரண்டு ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டுவந்த இந்த மிஷனின் ஸ்பைஸ் சூட் தற்போது பெங்களூரில் நடந்துவரும் ஸ்பேஸ் எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

”விண்வெளிக்குப் போகிறவர்களுக்கு இந்த உடைதான்!” - இஸ்ரோவின் 10,000 கோடி புராஜெக்ட்

ந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த ஆண்டு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் விண்வெளி மிஷனை அறிவித்திருந்தது. தி இந்தியன் ஸ்பேஸ்ஃப்லைட் ப்ரொக்ராம் (The Indian Spaceflight Programme) என்று அழைக்கப்படும் இந்த மிஷனை 2021 இறுதியில் ககன்யான் (Gaganyan) என்ற ஸ்பேஸ்கிராஃப்டின் மூலம் செயல்படுத்த உள்ளது. பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வட்டப்பாதையில், சுமார் ஐந்து முதல் ஏழு நாள்கள் வரை சுற்றிவருவதே இந்த மிஷனின் குறிக்கோள். இந்த ககன்யான், ஜிஎஸ்எல்வி-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 
  
இந்நிலையில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இரண்டு ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டுவந்த இந்த மிஷனின் ஸ்பேஸ் சூட், தற்போது பெங்களூரில் நடந்துவரும் ஸ்பைஸ் எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விண்வெளி கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த முன்மாதிரி சூட்டானது, ஆரஞ்சு வண்ணத்தில் தோற்றம் அளிக்கிறது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் விண்வெளியில் 60 நிமிடங்கள் வரை விண்வெளி வீரரால் சுவாசிக்க முடியும். தற்போதைக்கு இரண்டு சூட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் செல்லும் மிஷன் என்பதால், விரைவில் கூடுதலாக ஒரு சூட்டும் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரோ

Image Courtesy: Twitter/Nagarjuna Dwarkanath

இதுமட்டுமல்லாமல் விண்வெளி வீரர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்பும் காப்ஸ்யூலின் முன்மாதிரியும் இந்தக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது, வெப்பம் உள்ளே வராமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், திரும்பி பூமியின் உள்ளே வரும்போது, இந்த காப்ஸ்யூல் தீப்பற்றி ஒரு தீப்பந்தைப்போலதான் கீழே வந்தடையும். வெளியே கொழுந்துவிட்டு எரிந்தாலும் உள்ளே 25 டிகிரி செல்ஷியஸ் வெப்பம்தான் இருக்குமாம். உள்ளிருக்கும் விண்வெளி வீரர்கள், வெளியே எரியும் தீயை சிறிய ஜன்னல் ஒன்றின் வழியே உள்ளிருந்தே காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

90 நிமிடத்துக்கு ஒருமுறை பூமியைச் சுற்றிவரும் வீரர்கள், அந்தக் காலத்திற்குள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் என இரண்டையும் கண்டுவிடுவார்கள். விண்வெளியில் இருக்கும் இந்தக் காலத்தில், micro-gravity எனப்படும் நுண்-புவிஈர்ப்பு பற்றிய சோதனைகள் மேற்கொள்ளப்படும். இவர்களுக்கு உதவியாக விண்வெளி மருத்துவம், கதிர்வீச்சுப் பாதுகாப்பு, அவசரகால வழிமுறைகள் என அங்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல், சில நாட்கள் இருந்து வர அத்தியாவசியமானவற்றைப் பற்றி இஸ்ரோவுடன் பகிர்ந்துகொள்ள உள்ளது, பிரெஞ்சு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான CNES.

Capsule

விண்வெளி வீரர்கள், ராக்கெட் மூலம் மேல் குறிப்பிடப்பட்டுள்ள 400 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வட்டப்பாதையைச் சென்றடைய 16 நிமிடங்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், திரும்பி பூமிக்கு வர 36 நிமிடங்கள் ஆகுமாம். 

பூமிக்குத் திரும்பும் காப்ஸ்யூல், குஜராத் அருகில் உள்ள அரேபியக் கடல் பகுதியில் வந்து விழும். அது, தண்ணீரில் விழுந்த சில நொடிகளில் மீட்டு மேலே எடுக்க, கடற்படை தயார் நிலையில் இருக்குமென கண்காட்சியில் இஸ்ரோவால் தெரிவிக்கப்பட்டது. 10,000 கோடி ரூபாய் செலவில் இஸ்ரோ செய்யவிருக்கும் இந்த அபார முயற்சி வெற்றிபெறும் என அனைவரும் நம்புவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!