வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (08/09/2018)

கடைசி தொடர்பு:16:40 (08/09/2018)

விமானப் பயணத்தில் வளர்ந்த நாடுகளுக்கு சவால் விடும் இந்தியர்கள்!

உலக அளவில், அதிகமாக விமானத்தில் பயணம் மேற்கொண்டவர்களின் பட்டியலில் இந்தியர்களுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.

இந்தியா 3 -வது இடம்]

சர்வதேச விமான போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு 400 கோடி பயணிகள் சர்வதேச மற்றும் உள்நாடுகளுக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.  2017-ம் ஆண்டு, விமானத்தில் பயணித்தவர்களின் புள்ளிவிவரங்களை இந்த அறிக்கை கூறுகிறது. இந்தப் பட்டியலில், அமெரிக்கர்கள் முதலிடத்தில் உள்ளனர். 63.2 கோடி அமெரிக்கர்கள் விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது மொத்த பயணிகளின் எண்ணிக்கையில் 18.6 சதவிகிதமாகும். இதற்கு அடுத்த படியாக, சீனர்கள்  55.5 கோடி பேர் விமானப்போக்குவரத்தை உபயோகித்துள்ளனர். இந்தியர்கள் 16.1 கோடி பேர் விமான சேவையைப் பயன்படுத்தியுள்ளனர். இதில் 4.7 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். இங்கிலாந்து மற்றும் ஜெர்மானியர் இதற்கு அடுத்த இடங்களில் உள்ளனர்.


சர்வதேச விமான போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவிலான பொருளாதாரச் சூழல் மற்றும் கட்டணக் குறைவு காரணமாகவே ஏராளமானோர் விமான சேவையைப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.