திருமணமான பெண்களுக்கான மிஸஸ் இந்தியா போட்டி... வாகை சூடுவார்களா தமிழகப் பெண்கள்?

 மணப்பெண்ணுக்கான திருமண கெட்டப் தான் கான்செப்ட்

திருமணமான பெண்களுக்கான மிஸஸ் இந்தியா போட்டி... வாகை சூடுவார்களா தமிழகப் பெண்கள்?

திருமணம் முடிந்து, ஒரு குழந்தைப் பிறந்துவிட்டால், அழகு, ஆரோக்கியம் பற்றியெல்லாம் யோசிக்கக்கூடாது என்றிருந்த பழங்கால பெண்களின் நிலையை உடைத்து என் உடல், என் அழகு, என் ஆரோக்கியம் என்கிற அழகான சமுதாயம் மாறி வருகிறது. அப்படிப்பட்ட பெண்களை ஊக்குவிப்பதே மிஸஸ் இந்தியா போட்டியின் நோக்கம். 

மிஸஸ் இந்தியா

இந்தப் போட்டி மகராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலிருந்து இந்தப் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 திருமதிகள் இறுதிப் போட்டியில் பங்குபெற இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கான அழகுத் திருமதிகளை தேர்ந்தெடுத்த போட்டி சென்னையில்தான் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் ஹேமலதா ஷர்மா, அர்ச்சனா கந்தன்,சுவாதி ரமேஷ், ஹேமலதா ஏ,சோனாலி ஜெயின், திவ்யா மதன் குமார் என்ற ஆறு பெண்கள் வெவ்வேறு மாவட்டத்திலிருந்து வந்து தேர்வாகி இறுதிப் போட்டிக்கு சென்றிருக்கிறார்கள். இறுதிப் போட்டியில் இவர்களுக்கான கான்செப்ட் 'மணப்பெண்ணுக்கான திருமண கெட்டப்'. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 1999- ல் உலக அழகி பட்டம் பெற்ற 'யுக்தாமுகி' கிரீடம் சூட்டுவார். 

தமிழ்நாடு சார்பாக பங்கேற்கும் பெண்களிடம் பேசிய போது, ''இதுவொரு புது அனுபவம். திருமணத்துக்குப் பிறகும் எங்களுக்கான அடையாளத்தை உணர்த்தும் போட்டியாக நாங்கள் இந்தப் போட்டியை கருதுகிறோம். எங்களின் குடும்பத்தினர் தந்த ஆதரவுதான் எங்களை புனே வரை பயணிக்க வைக்கிறது. நம் பாரம்பர்ய ஆடையில், அலங்காரங்கள் செய்துகொண்டு  ஜொலிப்பதோடு, வாகையும் சூடுவோம்' என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள். 

உங்கள் அழகும் அறிவும் வெற்றி பெற வாழ்த்துகள் திருமதிகளே....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!