`அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு நாட்டை பா.ஜ.க தான் ஆளும்!” - அடித்துச்சொல்லும் அமித்ஷா

அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டில் பாஜகவின் ஆட்சிதான் நடக்கும் என்று அக்கட்சியின் தேசிய செயற்குழுக்கூட்டத்தில், அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அமித்ஷா

டெல்லியில் பா.ஜ.கவின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்று பிரதமர் மோடி, தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர், இதையடுத்து இந்த  செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த செயற்குழுக்கூட்டத்தை தொடர்ந்து, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,``வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க, தற்போது பிடித்துள்ள இடங்களை காட்டிலும், கூடுதல் இடங்களை பிடித்து, மிகப்பெரிய வெற்றி பெரும். மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி. அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டில் பா.ஜ.கவின் ஆட்சிதான் நடக்கும். யாரும் பா.ஜ.கவை தூக்கிவீசிவிட முடியாது என்று அமித் ஷா தெரிவித்தார். கடந்த 2001-ம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி வந்ததில் இருந்து, பா.ஜ.க எந்தவிதமான தேர்தலிலும் தோற்கவில்லை. இன்றுவரை அந்த மாநிலத்தில் தொடர்ந்து பா.ஜ.க தான் ஆட்சி செய்து வருகிறது. அதற்குக் காரணம் பா.ஜ.கவின் சிறந்த செயல்பாடுதான் என்று அமித் ஷா செயற்குழுவில் பேசினார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!