`எத்தனால் உற்பத்திக்காக 5 புதிய ஆலைகள்' - மத்திய அமைச்சர் அறிவிப்பு!

பெட்ரோல் விலை விரைவில் ரூ.55 ஆகக் குறையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். 

நிதின் கட்காரி

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வின் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குளாகி வருகின்றனர். விலை உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கண்டனங்கள் எழுப்பிவருவதோடு, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நாடு முழுவதும் பந்த் நடைபெற்றது. இதற்கிடையே, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, நேற்று சத்தீஸ்கர் மாநிலம் ராஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ``வருடம் தோறும் ரூ.8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைச் சமாளிக்க மத்திய அரசு 5 எத்தனால் உற்பத்தி ஆலைகளை நிறுவி வருகிறது. மரக்கழிவுகள், குப்பைகளில் இருந்து எத்தனால் தயாரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் பெட்ரோல் விலை ரூ.55 ஆகவும், டீசல் விலை ரூ.50 ஆகவும் குறையும். இது விரைவில் நடைபெறும். விவசாயிகள், பழங்குடியின மக்கள் எத்தனால் உற்பத்தியை மேற்கொள்ள முன்வர வேண்டும். இனி எத்தனாலே நமது எரிபொருளாக மாற்ற வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!