கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்த அரசு பேருந்து!- பறிபோன 10 பயணிகளின் உயிர்

தெலங்கானா மாநிலம் கொண்டகட்டு மாவட்டத்தில் அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 

தெலங்கானா விபத்து

தெலங்கானா மாநிலம் கொண்டகட்டு மாவட்டத்தில் அரசுப் பேருந்து ஒன்று ஜகிதல் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஷனிவர்பேட் என்ற இடத்தில் வரும்போது எதிர்பாராதவிதமாக அருகில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் இதுவரை 10 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஓட்டுநர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

விபத்து

மேலும் காயமடைந்தவர்களில் அதிகமானோர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக சென்று பேருந்தின் கண்ணாடிகளை உடைத்துக் காயமடைந்தவர்களை மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!