சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்தில் மாற்றங்கள்! - புதிய திட்ட வரைவு வெளியீடு

சென்னை டு சேலம் இடையேயான 8 வழிச் சாலை பாதையில் மாற்றம் செய்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

பசுமைவழிசாலை

சென்னை டு சேலம் இடையிலான பசுமை வழிச் சாலை திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம். இதுதொடர்பான அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அளித்துள்ளது. இதில், சென்னை - சேலம் 8 வழிச் சாலையின் திட்ட மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.7,210 கோடியாகக் குறைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 ஏக்கர் வனப்பகுதிக்கு பதிலாக, 103 ஏக்கர் வனப்பகுதி மட்டுமே கையகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வனப்பகுதியில் 70 மீட்டருக்கு பதில் 50 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்படும். வனப்பகுதிகளில் அமைக்கப்படும் சாலையின் தூரமும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 13.2 கிலோமீட்டருக்கு பதிலாக, 9 கிலோ மீட்டர் வரை மட்டுமே சாலை அமைக்கப்படும் எனவும், கல்வராயன் மலை பாதிக்காதவாறு, செங்கம் - சேலம்  என வழிமாற்றம் செய்யப்படும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!