அஸ்ஸாமைக் கலங்கடித்த நிலநடுக்கம்! - ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப் பதிவு

அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று காலை 10.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

ரிக்டர் அளவுகோல்

அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோக்ராஜ்ஹர் மாவட்டம் உள்ளிட்ட சில இடங்களில் நில அதிர்வு அதிகமாக உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப் பதிவாகியுள்ள நிலநடுக்கத்தால், வீடுகள், அலுவலகக் கட்டடங்கள் உள்ளிடவை குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் சாலைகளில் திரளாகக் கூடினர். கோக்ராஜ்ஹர் பகுதியில் பூமிக்கு அடியில் 13 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு, நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அஸ்ஸாம் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தைப்போல் மேற்குவங்க மாநிலம் கூச் பிஹார், அலிபிர்துவார், டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கும், நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அஸ்ஸாம் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், மீட்பு நடவடிக்கையில் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!