வைரலான தோனியின் பெட்ரோல் பங்க் புகைப்படம்?- உண்மை என்ன

நாட்டில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பாலும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவாலும் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88 ஆக உள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சில இடங்களில் ரூ.90-ஐ தாண்டி விட்டது. பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை (செப்டம்பர் 10-ம் தேதி) பந்த் அறிவித்திருந்தன. அதே தினத்தில் பெட்ரோல் பங்கில் தோனி, மனைவி சாக் ஷி ஆகியோர் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வைரல் ஆகின. 

தோனி

தோனியின் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி ரீ- ட்வீட் செய்ததே இதற்கு காரணம். இதையடுத்து, பெட்ரோல் விலை உயர்வுக்கு தோனி எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் பங்கில் அமர்ந்துள்ளார் என்று சிலர் வதந்தி பரப்பத் தொடங்கினர். தோனியின் புகைப்படத்தை எடுத்து பலரும் தங்களுக்குத் தோன்றிய வாசகங்களை எழுதி ரீ- ட்வீட் செய்தனர். `பெட்ரோல் விலை ரூ. 90 எட்டியிருப்பதால் இனிமேல் என்னால் ஹெலிபாக்டர் ஷாட் அடிக்க மாட்டேன். என்னிடம் ஹெலிகாப்டருக்கு ஊற்ற பெட்ரோல் வாங்க பணமில்லை' என்று தோனி சொல்வது போல ரீ-ட்வீட் வலம் வந்தது. மற்றொரு ட்வீட், `பெட்ரோல் வாங்க வழியில்லாமல் தோனி பெட்ரோல் பங்கில் அமர்ந்திருக்கிறார்' என்று சொன்னது. இப்படியாக தோனியின் புகைப்படத்தை வைத்து காமெடி செய்து கொண்டிருந்தனர். உண்மை நிலவரம் என்ன... இந்தப் புகைப்படம் எங்கே எப்போது எடுக்கப்பட்டது? 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சிம்லா நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் நடந்த ஷூட்டிங்கின் போது இயக்குநர் தோனிக்குக் காட்சியை விளக்கிக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். அப்போது சாக் ஷியுடம் உடன் இருந்துள்ளார். இந்தப் புகைப்படத்தை தோனியின் சிகை அலங்காரக் கலைஞர் ஸ்வப்னா பவானி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார். அருண் தாக்கூர் என்பவர் பந்த் நடந்த அன்று எடுக்கப்பட்டதாக ரீ -ட்வீட் செய்ய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி விவரம் தெரியாமல் ரீ- ட்வீட் செய்து சர்ச்சையில் சிக்கினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!