மத்திய அமைச்சரவையின் புதிய பயிர் கொள்முதல் விலைக் கொள்கை - யாருக்கு லாபம்? 

புதிய பயிர் விலை கொள்முதல் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ``புதிய பயிர் விலை கொள்முதல் கொள்கையால், மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச கொள்முதல் விலையின் பயன்பாட்டை, நாட்டின் அனைத்துப் பகுதி விவசாயிகளும் பெறுவார்கள்" என்று அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. 

பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை

ஜூலை மாதம், 22 விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு. இந்நிலையில், நேற்று (12.09.2018) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய பயிர் விலை கொள்முதல் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்பு, பிரதமர் மோடி, ``புதிய கொள்கை முடிவின் மூலம் 22 வகை விளைபொருட்களுக்கான உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையை, நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவார்கள். இதன்மூலம், மத்திய அரசுக்குக் கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும். அடுத்து ஆரம்பிக்க உள்ள அறுவடைக் காலத்தில் இருந்து புதிய கொள்முதல் விலை அமல்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை கூட்டத்தில், `எண்ணெய் வித்துகள் பயிரிடும் விவசாயிகளை உதவும் வகையில், மாத சராசரி சந்தை விலைக்கும், குறைந்தபட்ச ஆதார விலைக்கும் இடையிலான விலை வேறுபாட்டை விவசாயிகளுக்கு மத்திய அரசே வழங்கவும், பெட்ரோல் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எத்தனால் விலையைச் 25 சதவீதம் உயர்த்தவும்' ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!