பிரதமர் மோடியைத் தொடர்ந்து ராகுல், மன்மோகன் சிங்குடன் ராஜபக்‌ஷே சந்திப்பு!

மூன்று நாள் பயணமாக டெல்லி வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துப் பேசியுள்ளார். 

மன்மோகன் சிங், ராகுல் காந்தியுடன் ராஜபக்‌ஷே சந்திப்பு

சில வருடங்களுக்கு முன்னர் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். பசு வதைத் தடுப்பு, இந்துத்துவா, ராமர் கோயில் கட்டுவது போன்றவை இந்த அமைப்பின் நோக்கமாக இருந்தது. இந்த அமைப்பு சார்பாக நேற்று டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்திர ராஜபக்‌ஷேவை சுப்ரமணியன் சாமி அழைத்திருந்தார். 

கடந்த 11-ம் தேதி டெல்லி வந்த ராஜபக்‌ஷேவை சுப்பிரமணியன் சுவாமி நேரில் சென்று வரவேற்றார். இதன் பின்னர் நேற்று ராஜபக்‌ஷே பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியயோரை நேரில் சந்தித்து உரையாடினார். இவர்களின் சந்திப்பு எதைப் பற்றியது என்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும், ராஜபக்‌ஷே தொடர்ந்து பல தலைவர்களைச் சந்திப்பது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!