வெளியிடப்பட்ட நேரம்: 16:01 (13/09/2018)

கடைசி தொடர்பு:16:01 (13/09/2018)

உயிருக்குக் கேடு விளைவிக்கும் 327 மருந்துகளுக்குத் தடை - மத்திய அரசு நடவடிக்கை!

சாரிடன் உள்ளிட்ட 327 வகையான மருந்து, மாத்திரைப் பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.

சாரிடன் உள்ளிட்ட 327 வகையான மருந்து, மாத்திரைப் பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் பற்றி மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் கழகம் ஆய்வு செய்தது. அதில் குறிப்பிட்ட இருமல் மருந்துகள், வலி தீர்க்கும் மாத்திரைகள் ஆகியவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்று ஆய்வில் தெரிய வந்தது. தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிக்ஸ்டு - டோஸ் காம்பினேஷன் ( fixed-dose combination- FDC) எனப்படும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மருந்துகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்படும் மாத்திரைகளை மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

மாத்திரை

இன்று காலையிலிருந்து இந்தத் தடை அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் தடையால் இவற்றை உருவாக்கவோ பயன்படுத்தவோ, சோதனை செய்யவோ கூடாது. தடை செய்யப்படும் மருந்துகளின் எண்ணிக்கை இன்னும் சில தினங்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க