600 கிலோ பிரமாண்ட லட்டு! - இது ஹைதராபாத் விநாயகர் ஸ்பெஷல்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹைதராபாத்தில் 600 கிலோ எடையுள்ள பிரமாண்ட லட்டு விநாயகருக்குப் படைக்கப்பட்டது. 

லட்டு

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வட மாநிலக் கோயில்கள் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய தினத்தில் பழங்கள், காய்கறிகள், பலகாரங்கள் போன்ற பலவிதமான பொருள்களில் விநாயகரின் உருவம் செய்து வழிபடுவது தனி சிறப்பு. இதன் வரிசையில் ஹைதராபாத்தில் உள்ள கைராதாபாத் பெரிய விநாயகருக்கு 600 கிலோ எடையுள்ள பிரமாண்ட லட்டுப் படைக்கப்பட்டது. இந்த லட்டு ஆந்திராவில் உள்ள தாபேஸ்வரத்தில் இருந்து நேற்று ஹைதராபாத் வந்தடைந்தது. இதை மல்லிகார்ஜுன ராவ் கோயிலுக்கு வழங்கியுள்ளார். இரண்டாவது முறையாக இந்த வருடம் பிரமாண்ட லட்டு செய்யப்பட்டுள்ளது. 

220 கிலோ சர்க்கரை, 145 கிலோ பசு நெய், 175 கிலோ கொண்டை கடலை, 25 கிலோ முந்திரிப் பருப்பு மற்றும் 13 கிலோ பாதாம் பருப்பு, மூன்று கிலோ ஏலக்காய் மற்றும் ஒரு கிலோ பச்சை கற்பூரம் ஆகியவை சேர்த்து இந்த ‘மஹா பிரசாதம்’ என்ற பிரமாண்ட லட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன ராவ் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!