மதுபோதையில் விபரீதம்! - உயிருள்ள பாம்பை விழுங்கியவர் மரணம் வைரல் வீடியோ

மதுபோதையில், உயிருள்ள பாம்பை விழுங்கியவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பாம்பு

உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஹிபால் சிங் (40). கூலித்தொழிலாளியான இவர், மதுபோதையில் இருந்துள்ளார். இந்நிலையில் சாலையில் கிடந்த பாம்பை வைத்துக்கொண்டு வித்தைக் காட்டியுள்ளார். இவரது செயல் அனைத்தையும் அருகிலுள்ள சிலர், தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, மஹிபாலை தூண்டிய அவர்கள், பாம்பை உயிருடன் விழுங்குமாறு கூறியுள்ளனர். அவர்களின் பேச்சைக்கேட்டு, போதையிலிருந்ததால், அவரும் உயிருடன்  பாம்பை எடுத்து விழுங்கியுள்ளார். உடனே, வாந்தி, மயக்கத்தால் அவர் அவதிப்பட்டுள்ளார். ஆனால், பாம்பு வெளியே வரவில்லை. உடனே அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்தச் செல்லப்பட்ட அவர், விஷத்தின் தாக்கத்தால் அடுத்த 4 மணிநேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ராஜ்புரா போலீஸார் பேசுகையில், ``மஹிபாலின் குடும்பத்தார், இது தொடர்பாக எந்தப் புகாரும் அளிக்கவில்லை; இருப்பினும் அவருக்கு தூண்டுதலாக  இருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தபட்டு வருகிறது” என்று அவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த மஹிபால் பாம்பை வைத்து வித்தை காட்டும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!