அடுத்த தலைமை நீதிபதியை உறுதி செய்தார் குடியரசுத் தலைவர்..! | President Appoints Ranjan Gogoi as Chief Justice

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (13/09/2018)

கடைசி தொடர்பு:21:40 (13/09/2018)

அடுத்த தலைமை நீதிபதியை உறுதி செய்தார் குடியரசுத் தலைவர்..!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து, ஆணை பிறப்பித்துள்ளார், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.

நீதிபதி ரஞ்சன் கோகாய்

உச்ச நீதிமன்றம் தனது அடுத்த தலைமை நீதிபதியை ஏற்றுக்கொள்ள தயாராகிவருகிறது. தற்போதுள்ள தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, அடுத்த மாதம் 2-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். பொதுவாக, தலைமை நீதிபதி ஒருவர் ஓய்வு பெறும்போது, அடுத்த தலைமை நீதிபதியை அவர் பரிந்துரைப்பார். அந்த  நீதிபதி பணிமூப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில், தீபக் மிஸ்ரா, உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாயை, அடுத்த தலைமை நீதிபதியாக்க பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில், ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அக்டோபர் 3- தேதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொள்ள உள்ளார்.வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்படும் முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பணியாற்றுவார்.