ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தடையை மீறி நுழைந்த வழக்கில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

சந்திரபாபு நாயுடு

மகாராஷ்டிரா மாநிலம் நான்ந்டெட் பகுதியில் கோதாவரி ஆற்றின் குறுக்கே, அம்மாநில அரசு பாப்ஸி என்ற அணையைக் கட்டியது. இந்த அணை கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2010-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அவரது கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் அணையை முற்றுகையிடப்போவதாக அறிவித்தார்.

அதையடுத்து, அப்பகுதியில் மகாராஷ்டிரா அரசு 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது. தடையை மீறி நுழைய முயன்ற சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 30 எம்.எல்.ஏ-க்கள், 8 எம்.பி-க்கள் அப்போது கைதுசெய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு, துர்ஹமாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் ஆஜராக சந்திரபாபு நாயுடுவுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ஒருமுறைகூட  அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!