கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..! | Goa CM Manohar Parrikar has been admitted to hospital

வெளியிடப்பட்ட நேரம்: 06:32 (14/09/2018)

கடைசி தொடர்பு:07:56 (14/09/2018)

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிகர், கணையப் புற்றுநோய் சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மனோகர் பாரிக்கர்

கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், கடந்த மார்ச் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு ஜூன் மாதம் இந்தியா திரும்பினார். அதன்பிறகு, இரண்டுமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை  எடுத்துக்கொண்டார். இந்த நிலையில், நேற்று மீண்டும் கோவாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கோவா மாநில துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ, 'சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நலமாக உள்ளது' என்றார்.