வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்று வசூலித்த தொகை, 12 ஆயிரம் கோடி ரூபாய்!

வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்று கடந்த நான்கு ஆண்டுகளில் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் அபராதமாக வசூலித்த தொகை, 11 ஆயிரத்து 528 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

மினிமம் 

2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்பு, பொதுமக்கள் அனைவரும் வங்கிக் கணக்கைத் தொடங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வங்கிகள் தங்களுடைய சேவைக்காக, வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகையாகக் குறிப்பிட்ட தொகையை வைத்திருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியது. குறிப்பிட்ட தொகைக்குக் குறைவாக இருந்தால், ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக தன்னாலேயே வங்கி எடுத்துக்கொள்ளும் என்பதையும் நடைமுறைப்படுத்தியது. 

பெருநகரங்களில், வங்கி வாடிக்கையாளருக்கான குறைந்தபட்ச வைப்புத்தொகை பொதுத்துறை வங்கிகளில் ரூ.5,000 ஆகவும், தனியார் வங்கிகளில் ரூ. 10,000 ஆகவும் உயர்த்தப்பட்டன. இந்த வகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் 21 பொதுத்துறை வங்கிகளும், மூன்று தனியார் வங்கிகளும் குறைந்தபட்ச வைப்புத்தொகை குறைவாக இருக்கிறது என்று அபராதமாக 11 ஆயிரத்து 528 கோடி ரூபாய் வசூலித்துள்ளன. குறிப்பாக, 2017-18 நிதி ஆண்டில் மட்டுமே 4 ஆயிரத்து 980 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஒரு பக்கம் பொதுமக்களின் பணத்தை அபராதமாக வசூலித்த வங்கிகள், பெருமுதலாளிகளுக்குக் கடன் கொடுத்து திரும்ப வசூலிக்க முடியாமல் பல லட்சம் கோடி ரூபாயை வாராக்கடனாகத் தள்ளுபடிசெய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!