3 காரணங்களால் ஏறுமுகத்துடன் தொடங்கியது இந்திய பங்குச் சந்தை!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விடுமுறைக்குப் பின்,  வாரத்தின் இறுதி வர்த்தக தினமான இன்று வெள்ளிக்கிழமை பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.

பங்குச் சந்தை

சர்வதேச நிலவரங்கள் நன்றாக இருந்தது, கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்துள்ளது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு கண்டுள்ளது ஆகிய காரணங்களால்,  இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,  இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 37939 புள்ளிகள்  உயர்வுடனும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்  நிஃப்டி 11443 புள்ளிகளுடனும் உயர்வுடன் தொடங்கியது.

காலை 11 மணி நிலவரப்படி, 244.06 புள்ளிகள் உயர்ந்து 37962.02 புள்ளிகளுடன் உயர்வில்  பயணிக்கிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 94.95  புள்ளிகள் அதிகரித்து, 11464.85 புள்ளிகளுடன் காணப்படுகிறது. இன்றைய  பங்கு வர்த்தகத்தில்  எஸ் பேங்க், பவர் கிரிட் கார்ப்பரேஷன், வேதாந்தா ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், எச்.சி.எஸ் டெக்னாலாஜி, பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் உள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை 49 பைசா உயர்ந்து, ரூ.71.70 ஆக முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த புதன்கிழமை, ரூபாய் மதிப்பு 72.19 ஆகச் சரிவடைந்து காணப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!