பழைய முறைக்கே திரும்புகிறதா வரதட்சணை சட்டம் - உங்கள் கருத்து என்ன?

``பெண்களைப் புகுந்த வீட்டாரின் கொடுமையில் இருந்து காப்பாற்றுகிற அதே நேரத்தில்,  இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பெண்களிடமிருந்து அவள் கணவனையும் அவன் வீட்டாரையும் பாதுகாக்கவும் வேண்டும். அதனால், வரதட்சணைத் தொடர்பாக புகார் வந்தால் குற்றம்சாட்டப்பட்ட நபரை, காவல்துறை உடனே கைது செய்யக்கூடாது, குற்றம் சாட்டப்பட்டவர்களைக் குடும்ப நல அமைப்பு விசாரித்துத் தருகிற அறிக்கையின் அடிப்படையில்தான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும்''

வரதட்சணை - உச்சநீதிமன்றம்

சென்ற வருடம் வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டத்தில்  (498ஏ பிரிவு) மேற்கண்ட தீர்ப்பை சொல்லியிருந்தது உச்ச நீதிமன்றம். அப்போதே, இதை மாற்றச் சொல்லி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், ``பழையபடி காவல்துறையே வரதட்சணை வழக்கைப் பதிவு செய்து விசாரிக்கலாம். வரதட்சணைப் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட நபரை உடனடியாக கைது செய்யப்படுவதற்கான இருந்த தடையும் நீக்கப்படுகிறது. வரதட்சணைப் புகார் கொடுத்த பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட கணவனுக்கும் அவன் குடும்பத்தாருக்கும்  தேவைப்பட்டால் முன்ஜாமீனும் வழங்கலாம்'' என்று இன்று திருத்தங்களோடு தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இதைப்பற்றி மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் பேசினோம். ``வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டத்தை சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால், அப்பாவிகளும் பாதிக்கப்படுகிறார்கள் என்றுதான் இடையில் ஒரு கமிட்டியை ஏற்படுத்தினார்கள். இந்த கமிட்டி என்பது  குற்றவியல் சட்டத்தில் இல்லாத ஒன்று. தற்போது வரதட்சணைப் புகார்களை விசாரிக்க மாவட்டம்தோறும் குடும்ப நல அமைப்புகளை அமைக்கத் தேவையில்லை, காவல்துறையே விசாரிக்கலாம் என்கிறது உச்ச நீதிமன்றம். ஆகப் பழைய முறைக்கே மறுபடியும் கொண்டு வந்திருக்கிறார்கள். என் கேள்வியெல்லாம்... பழைய முறையில் இருந்த தவறுகள் எல்லாம் மாறிவிட்டதா என்பதுதான்'' என்று முடித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!