வெளியிடப்பட்ட நேரம்: 16:12 (14/09/2018)

கடைசி தொடர்பு:09:42 (15/09/2018)

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தேர்தல் தொடங்கியது!

ஜே என் யூ மாணவர் சங்கத் தேர்தல்

2018-ம் ஆண்டுக்கான JNUSU - ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் இன்று (14.09.2018) காலை 9.30 மணியளவில் தொடங்கியது. தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர், மற்றும் பாடப்பிரிவுகளுக்கான கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி அடைபவர்களே மாணவர் பிரதிநிதிகளாவர். இதற்காக, பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் அமைப்பு (Birsa Ambedkar Phule Students Association - BAPSA), காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (National Students Union of India - NSUI),   ஆர்.எஸ்.எஸ் இன் மாணவரெ அமைப்பான ஏபிவிபி -யின் மாணவ அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் (Akhila Bharatiya Vidyarthi Parsishad - ABVP), அனைத்திந்திய மாணவர் சங்கம் (All Indian Students Association – AISA), இந்திய மாணவர் சங்கம் (Students Federation of India - SFI), ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (Democratic Students Federation - DSF), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (All India Students Federation ) உள்ளிட்ட அமைப்புகள் இந்தத் தேர்தலில் களம் காண்கின்றன. முக்கியமாக எதிரெதிர் துருவங்களாகச் செயல்பட்டு வந்த மாணவ அமைப்புகளான இடதுசாரி அமைப்புகள் ஒன்றுபட்டுத் தேர்தலைச் சந்திக்கின்றன. இந்த ஆண்டு நடைபெறும் மாணவ அமைப்புக்கான தேர்தல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு இடதுசாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டணி [AISA - DSF - SFI - AISF] சார்பில் சாய்பாலாஜி, ஏ.பி.வி.பி. [ABVP] சார்பில் லலித் பாண்டே, பாப்சா [BAPSA] சார்பில் தள்ளபள்ளி பிரவீன், என்.எஸ்.யு.ஐ. [NSUI] சார்பில் விகாஸ் யாதவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நான்கு போட்டியாளர்களிடையே  கடுமையான போட்டி நிலவுகிறது.

இம்மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகளை வரும் ஞாயிறு 16.09.2018 அன்று தெரிந்துகொள்ளலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க