வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (14/09/2018)

கடைசி தொடர்பு:18:35 (14/09/2018)

குருவாயூர் கோயில் மேல்சாந்தியாகப் பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வு!

கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயில் மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பரமேஸ்வரன் நம்பூதி

கேரள மாநிலத்தின் குருவாயூர் கிருஷ்ணன் கோயில் உலக பிரசித்திபெற்றதாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். விழா நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்வார்கள். குருவாயூர் கோயிலில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மேல்சாந்தி தேர்ந்தெடுப்பது வழக்கம். அந்த அடிப்படையில் இப்போதைய மேல்சாந்தி பொறுப்புகாக 47 பேர் விண்ணப்பித்தனர். அதில் 41 பேரிடம் நேர்காணல் நடத்தினர். அதில் தகுதியுள்ள 39-பேர் தேர்வுசெய்யப்பட்டு அவர்களின் பெயர்கள் குருவாயூர் கோயில் நமஸ்கார மண்டபத்தில் வைத்து இப்போதைய மேல்சாந்தி பவன் நம்பூதிரி தேர்வுசெய்தார்.

அதன் மூலம் வாவத்து கலியமன பரமேஸ்வரன் நம்பூதிரி (53) அடுத்த மேல்சாந்தியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பரமேஸ்வரன் நம்பூதிரி 25 ஆண்டுகளாகப் பாகவத ஸ்ப்தாக யக்ஞம் செய்துவருகிறார். இந்த மாதம் 30-ம் தேதி நடக்கும் அத்தாள பூஜைக்குப் பிறகு, பரமேஸ்வரன் மேல்சாந்தியாகப் பொறுப்பேற்கிறார். அடுத்த ஆறு மாதத்துக்கு பரமேஸ்வரன் நம்பூதிரி மேல்சாந்தி பொறுப்பில் இருந்து பூஜைகள் செய்வார்.