பெண் மீது சரமாரி தாக்குதல்; கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மகன்!

இளம்பெண்ணை கண்மூடித்தனமாகத் தாக்கிய, டெல்லி காவல் ஆய்வாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் ஆய்வாளர் மகன்


சமூக வலைதளங்களில், வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர், பெண்ணை அறைந்து எட்டி உதைக்கிறார். அந்தப் பெண், நிலைதடுமாறி கீழே விழுகிறார். அவர் தாக்குதலை நிறுத்தவில்லை, மீண்டும் அந்தப் பெண்ணை அடிக்கிறார். அந்த பெண் தொடர்ந்து தாக்கப்படுகிறார். பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சியில் இருக்கும், இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி திலக் நகரில் உள்ள பி.பி.ஓ அலுவலகம் ஒன்றில் இந்தச் சம்பவம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், இளைஞரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில், அந்த இளைஞர், காவல்துறை ஆய்வாளர் அசோக் சிங் தோமரின் மகன் ரோஹித் தோமர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்றது என்பதும், அவர் அடிப்பதை நண்பர்கள் போனில் பதிவுசெய்ததும் தெரியவந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!