வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (15/09/2018)

கடைசி தொடர்பு:07:42 (15/09/2018)

உடல்நிலை பாதிப்பு விவகாரம் - மனோகர் பாரிக்கரை மாற்ற பா.ஜ.க ஆலோசனை?

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் அவருடைய பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மனோகர் பாரிக்கர்

கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், கடந்த மார்ச் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு, ஜூன் மாதம் இந்தியா திரும்பினார். அதன்பிறகு, இரண்டுமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை  எடுத்துக்கொண்டார். இந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் கோவாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனோகர் பாரிக்கருக்குப் பதிலாக வேறு ஒருவர் அவருடைய பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்காக, வரும் திங்கள்கிழமை பா.ஜ.க தலைமை அலுவலகத்திலிருந்து, ஒரு குழு கோவா செல்லும் என்று தெரிகிறது. அந்தக் குழுவில் ராம்லால், பி.எல்.சந்தோஷ் ஆகியோரும் இருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்நிலையின் காரணமாக, மனோகர் பாரிக்கர், முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதுகுறித்து பா.ஜ.க தலைவர் அமித்ஷாவிடம் பேசியிருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.