`மகளை வன்கொடுமை செய்தவர்கள் என் கண்ணெதிரே நடமாடுகிறார்கள்!'- மாணவியின் அம்மா கண்ணீர்

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்து, பிரதமர் மோடி கையால் 2 ஆண்டுக்கு முன்பு வெகுமதி பெற்ற ஹரியானா மாணவி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். என்ன நடந்தது அந்த மாணவிக்கு?

மோடி - மாணவி

தற்போது, கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வருகிறார் அந்த மாணவி, இரண்டு நாள்களுக்கு முன்பு கோச்சிங் கிளாஸ் செல்வதற்காகப் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது, காரில் வந்த மூன்று இளைஞர்கள், அவரை வலுக்கட்டாயமாகக் கடத்திச்சென்றிருக்கிறார்கள். ஆள்நடமாட்டம் இல்லாத வயல் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். கடத்திச்சென்ற மூவருடன், இந்த வன்செயலைச் செய்வதற்காக ஏற்கெனவே அங்கு வந்திருந்த சில ஆண்களும் சேர்ந்து இந்தக் கொடுமையை நிகழ்த்தியிருக்கிறார்கள். போதை மருந்து கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு வலுக்கட்டாயமாகக் கொடுத்து, இந்த அட்டூழியத்தையும் செய்திருக்கிறார்கள். ஒரு நாள் கழித்து, மயக்க நிலையில் அந்த மாணவியை ஒரு பேருந்து நிலையத்தின் சந்துக்குள் போட்டிருக்கிறார்கள்.

தற்போது, மருத்துவமனை சிகிச்சையில் இருக்கும் அந்த மாணவி, தன்னைக் கடத்திச்சென்ற மூன்று குற்றவாளிகளை மட்டும் அடையாளம் காட்டினார். காவல்துறையினர் அவர்களைக் கைது செய்துள்ளார்கள். அந்த மூன்று பேருமே மாணவியின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட மாணவியின் அம்மா, ``என் மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் சிலரை மட்டுமே கைது செய்திருக்கிறார்கள். மற்றவர்கள் கிராமத்தில் என் கண்ணெதிரிலேயே நடமாடி வருகிறார்கள். 'மகள்களைக் காப்பாற்றுங்கள்' என்று பிரதமர் மோடிஜி சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால், படிக்க அனுப்பிய என் மகளை யாரும் காப்பாற்றவில்லையே'' எனக் கதறுகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!