வெளியிடப்பட்ட நேரம்: 17:24 (15/09/2018)

கடைசி தொடர்பு:17:24 (15/09/2018)

`அதிகம் விற்பனையான டாப் 10 கார் மாடல்களில் 6 மாடல்கள்!’ - மாருதி சுஸூகி ஆதிக்கம்


கஸ்ட் மாதத்துக்கான பயணிகள் வாகன விற்பனையில், அதிகம் விற்பனையான 10 மாடல்களின் பட்டியலில் மாருதி சுஸூகியின் ஆறு மாடல்கள் இடம்பிடித்துள்ளன. அதேபோல், முதல் 20 இடங்களில் 10 இடங்களையும் மாருதி நிறுவனம் பிடித்துள்ளது.

இந்தியாவில் கார் தயாரிப்பில் முன்னனியில் இருக்கும் கார் நிறுவனங்கள் அனைத்தும் ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 2,82,809 கார்களை தயாரித்துள்ளது. இதில் மாருதி நிறுவனம் மட்டும் 1,45,624 கார்களைத் தயாரித்தது. அதில் ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் விற்பனையான கார்களில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஆல்டோ மாடலில் மொத்தம் 22,237 கார்கள் விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆல்டோ மாடலில் 3.3% விற்பனை அதிகரித்துள்ளது. மாருதி சுஸூகியின் டிசையர் மாடலில் 21,990 கார்களும் ஸ்விஃப்ட் மாடலில் 19,115 கார்களும் விற்பனையாகி பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. 

மாருதி

பெலினோ மாடலில் 17,713 கார்கள் விற்பனையாகி நான்காவது இடத்திலும், வேகன் - ஆர் (13,658 கார்கள்) மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா  (13,271 கார்கள்) விற்பனையாகி ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்திலும் இருக்கின்றன. ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் i10 (11,489 கார்கள்) ஏழாவது இடத்திலும், ஹூண்டாய்  எலீட் i20 (11,475 கார்கள்) எட்டாவது இடத்திலும் உள்ளது. அதேபோல், ஹூண்டாய்  க்ரெட்டா மாடல் (10,394 கார்கள்) ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தைவிட இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் க்ரெட்டா மாடல் காரின் விற்பனையும் 2.3% அதிகரித்துள்ளது. அதேபோல், ஹோண்டா அமேஸ் மாடலில் 9,644 கார்கள் விற்பனையாகி பட்டியலில் 10 வது இடத்தில் இருக்கின்றது.

அதேபோல், கடந்த ஜூலை மாதம் 29 கார்களை மட்டுமே தயாரித்த ஃபியட் கார் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் 97 கார்களைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க