வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (16/09/2018)

கடைசி தொடர்பு:06:30 (16/09/2018)

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம் - அமித் ஷா விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

அமித்ஷா

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரையில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை தற்போது 85 ரூபாயை தொட்டுள்ளது. டீசல், விலை 78 ரூபாயை தொட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன.

இந்த நிலையில், தெலுங்கானாவில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் அமித்ஷா, 'அமெரிக்காவுக்கும், சீனாவுக்கு இடையே நடந்துவரும் வர்த்தகப் போரின் காரணமாகவும், அமெரிக்கா மற்றும் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்னைகள் காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவைச் சந்தித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசும் கவனத்தில் கொண்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்' என்று தெரிவித்தார்.