வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/09/2018)

கடைசி தொடர்பு:06:00 (16/09/2018)

'மக்கள் சேவைத் திட்டத்தை சீர்குலைக்கிறார்கள்' - அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை

வீடு தேடிவரும் அரசு சேவைத் திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக சிலர் சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

அரவிந்த் கெஜ்ரிவால்

திருமணச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அரசு சேவைகள் வீடு தேடிவரும் திட்டத்தை டெல்லி அரசு 10-ம் தேதி தொடங்கியது. அந்தத் திட்டத்துக்கு டெல்லி மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனால், முதல் நாளிலேயே 20 ஆயிரத்துக்கு அதிகமான தொலைபேசி மூலம் அந்தச் சேவையைத் தொடர்புகொண்டனர். ஆனால், அத்தனை பேருக்கும் பதிலளிக்கும் அளிவிலான வசதியை அந்தச் சேவை மையம் கொண்டிருக்கவில்லை. தேவையான அளவுக்கு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று டெல்லி அரசு அறிவித்திருந்தது. இந்தநிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர் பதவில், 'அரசியல் காரணங்களுக்காக வீடு தேடிவரும் அரசு சேவைத் திட்டத்தை சிலர் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவர்கள் மக்களுக்கு எதிராக செயல்படக் கூடாது. அது தவறான விஷயம். மக்கள் நலத் திட்டங்களுக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.