வெளியிடப்பட்ட நேரம்: 08:34 (16/09/2018)

கடைசி தொடர்பு:08:34 (16/09/2018)

`நான் மினிஸ்டர்; எனக்கு பெட்ரோல் விலை உயர்வால் பாதிப்பில்லை' - மத்திய அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

நான் மத்திய அமைச்சராக இருப்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்னைப் பாதிக்கவில்லை என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். 

ராம்தாஸ் அத்வாலே

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு சதத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இது பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களிடமும் எதிர்ப்பலைகளை உண்டாக்கியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் பந்த் நடத்தினர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அதனை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் மாநில அரசுகளோ மத்திய அரசு தான் அதனைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறி வருகின்றனர். நிலைமை இப்படி இருக்க மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவரிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ``பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்னைப் பாதிக்கவில்லை. ஏனென்றால் நான் மத்திய அமைச்சராக இருக்கிறேன். எனக்கு அரசிடம் இருந்து சலுகைகள் கிடைக்கிறது. ஒருவேளை நான் அமைச்சர் பதவியை இழந்தால் பாதிக்கப்படுவேன். விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது உண்மை தான். விரைவில் அரசு விலையைக் குறைக்கும்" என்றார். இவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க