வயலில் உழுதபோது விவசாயிக்குக் கிடைத்த ஜாக்பாட்!

30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12.8 கேரட் வைரம் மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதென அங்குள்ள அதிகாரி  ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இம்மாவட்டம் வைர சுரங்கங்களுக்கு பெயர் பெற்றது. இந்திய அளவில் முக்கிய மஜ்ஹகவான் வைர சுரங்கமும் இங்கு தான் உள்ளது.

வைரம்

 மாவட்ட சுரங்கம் மற்றும் வைர அதிகாரி சந்தோஷ் சிங் இதைப் பற்றி தெரிவித்தார். அந்த விவசாய நிலமானது சரோகா என்னும் கிராமத்தில் கேதர்நாத் ராய்கர் என்பவருக்குச் செந்தமானது. அவர் அதை பிரகாஷ் குமார் சர்மா என்பவருக்குக் குத்தகைக்கு விட்டுள்ளார். சர்மா உழவு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போது இந்த வைரக்கல் அவருக்குத் தென்பட்டுள்ளது.

இவ்வைரம் பொது ஏலத்தில் விடப்பட்டு அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய உரிமைத்தொகை மற்றும் வரிகளைக் கழித்து மீதமுள்ள தொகை குத்தகைக்கு எடுத்துள்ள சர்மா அவர்களிடமே கொடுக்கப்படும் என அவர் கூறினார். அதிர்ஷ்டம் சிலபேர் கதவைத் தான் தட்டும் என்பதற்கு இது ஒரு சான்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!