வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (16/09/2018)

கடைசி தொடர்பு:14:30 (16/09/2018)

பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட் இன்று விண்ணில் சீறிப்பாய்கிறது!

ஶ்ரீஹரிகோடட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-42 ரக ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. 

பிஎஸ்எல்வி

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்றார்போல், உலக நாடுகளுக்குச் சவால் விடுக்கும் வகையில் விண்வெளித் துறையில் இஸ்ரோ சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்தவகையில், பி.எஸ்.எல்.வி 44-வது ராக்கெட் மூலம் இங்கிலாந்து நாட்டின் செயற்கைக்கோளை இன்று விண்ணில் ஏவுகிறது. இதற்கான 33 மணி நேரக் கவுண்டன் நேற்றில் இருந்து தொடங்கியது. இன்று இரவு 10 மணியளவில் பி.எஸ்.எல்.வி சி-42 ரக ராக்கெட் விண்ணின் ஏவப்படுகிறது. 

சுமார் 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி ராக்கெட் 230.4 டன் எடை கொண்டது ஆகும். இதனுடன், இங்கிலாந்து நாட்டுக்குச் சொந்தமான நோவாசர் மற்றும் எஸ் ஐ-4 என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது. திட எரிபொருள் மற்றும் திரவ எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறைவடைந்த நிலையில் கவுண்டன் தொடங்கப்பட்டது. நோவாசர் செயற்கைக்கோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர்களைக் கண்காணிக்கும். அதே போல், எஸ் ஐ-4 செயற்கைக்கோள் இயற்கை, சுற்றுச் சூழல் உள்ளிட்டவை குறைத்து கண்காணிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.