வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (16/09/2018)

கடைசி தொடர்பு:20:00 (16/09/2018)

68 வயதை தொடும் பிரதமர் மோடி; குழந்தைகளுடன் நாளை தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்!

நாளை வராணாசி செல்லும் பிரதமர் மோடி, தனது பிறந்தநாளை அங்குள்ள  பள்ளிக்குழந்தைகளுடன் கொண்டாடுகிறார். மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

மோடி


பாரத பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 1950-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி பிறந்தார். 67-வயது கடந்த நிலையில், நாளை தனது 68-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவர் தனது பிறந்தநாளையொட்டி 2 நாள் பயணமாக நாளை  உத்தரபிரதேசம் செல்கிறார். சொந்த   நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் உள்ள பாரா லால்பூரில் பள்ளிக்குழந்தைகளுடன் பிரதமர் மோடி பிறந்தநாளை கொண்டாடுகிறார். மேலும், தனது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் ஒன்றையும் அவர் குழந்தைகளுடன் கண்டுகளிக்கிறார்.

இதையடுத்து 18-ம் தேதி வாரணாசியில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அவர்  அடிக்கல் நாட்டுகிறார். அதே போல, நிறைவடைந்ந  சில நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து, வாரணாசியின் புறநகர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அவர் அன்றிரவு டெல்லி திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.